Home One Line P1 “யாதும் ஊரே” மாநாட்டில் மலேசியத் தமிழ் இயக்கங்களின் காணொலிகள்

“யாதும் ஊரே” மாநாட்டில் மலேசியத் தமிழ் இயக்கங்களின் காணொலிகள்

995
0
SHARE
Ad
யாதும் ஊரே – மாநாட்டின் மலேசிய ஆலோசகர்கள் என்.எஸ்.இராஜேந்திரன் – முத்து நெடுமாறன் – சி.ம.இளந்தமிழ்

கோலாலம்பூர் : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தமிழ்நாடு அரசும் தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கமும் வரும் அக்டோபர் மாதம் 29, 30, 31 நாட்களில் “யாதும் ஊரே” தமிழ் மாநாட்டை இணையம் வழியே நடத்தவிருக்கின்றனர்.

இதனை ஒட்டி பன்னாட்டு தமிழ் சார்ந்த அறவாரியம், தமிழ் இயக்கம், தமிழ் சங்கம் பற்றிய செய்தி, முகவரி மற்றும் ஒரு நிமிட காணொளி ஒன்றினை ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

உங்கள் காணொலிகளை yaadhumooraemy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு “ யாதும் ஊரே” மாநாட்டின் மலேசிய ஆலோசகர்கள்  முனைவர் என் எஸ் இராசேந்திரன், திரு முத்து நெடுமாறன், சி.ம.இளந்தமிழ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

காணொலிகளைத் தங்களுக்கு அனுப்பி வைக்கும்படி மேற்குறிப்பிட்ட மலேசிய ஆலோசகர்கள் மலேசிய இயக்கங்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அனுப்பப்படும் காணொலிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாநாட்டின் வலைத் தளத்தில் இடம் பெறும். அக்டோபர் மாதம் 20 ஆம் தேதிக்குள் காணொலிகளை அனுப்புமாறு மலேசிய ஆலோசகர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.