Home One Line P2 மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கலாம்- கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளர்!

மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கலாம்- கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளர்!

898
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தினை நடத்தி உள்ளது. அரசியல் களம் சூடு பிடித்துள்ளதை திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள், அதிமுக செயற்குழு கூட்டங்கள் ஆகியவை நடந்து வருவதன் மூலம் அறியலாம்.

இதனிடையே, நடந்து முடிந்த மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டத்தில், முதலைமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கமல்ஹாசன் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் சென்னையில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.” என்று மகேந்திரன் கூறினார்.

நடைபெற இருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலின் போது தனித்துப் போட்டியிடுவது அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது போன்ற விவகாரங்கள் பேசப்பட்டதாக இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.