
கோலாலம்பூர் – ஒரு காலத்தில் அம்னோவின் அமைச்சர்களில் ஒருவராகவும், பலம் பொருந்திய ஜோகூர் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும் வலம் வந்த டான்ஸ்ரீ சைட் ஹமிட் அல்பார் பக்காத்தான் ஹரப்பானுக்கு ஆதரவாகத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
சைட் ஹமிட், அரசாங்க அமைப்பான ‘ஸ்பாட்’ (SPAD) எனப்படும் தரைப் பொதுப் போக்குவரத்துக்கான ஆணையத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என முதலில் பதிவிட்ட சைட் ஹமிட், ஆகக் கடைசியாக செய்திருக்கும் பதிவில் பக்காத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டுள்ளார்.
