அவரது தியாகங்களை நாம் மறந்து விடக் கூடாது என்று கூறிய ராய்ஸ் யாத்திம் இன்னும் 3 வாரங்களில் அன்வார் விடுதலையாகி வெளிவரும்போது, அவரை நாம் அனைவரும் திரண்டு வந்து வரவேற்க வேண்டும் என்றும் கூறினார்.
மலாய்க்காரர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும், அன்வாரின் தியாகங்களுக்காக மலாய்க்காரர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் ராய்ஸ் தனது உரையில் கூறினார்.
மகாதீர் – அன்வார் இணைந்த கூட்டணிதான் மலேசியாவை வழிநடத்த சிறந்த தலைமைத்துவம் என்றும் பிபிசி ஊடகம் தெரிவித்திருப்பதையும் ராய்ஸ் கூட்டத்தினருக்குச் சுட்டிக் காட்டினார்.