Home தேர்தல்-14 சாஹிட் ஹமிடியின் இறுதிக் கட்டப் பிரச்சாரம் சிகாமாட் தொகுதியில்!

சாஹிட் ஹமிடியின் இறுதிக் கட்டப் பிரச்சாரம் சிகாமாட் தொகுதியில்!

1024
0
SHARE
Ad

சிகாமாட் – பொதுத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது முதற்கொண்டு பெரும்பாலும் தான் போட்டியிடும் பாகான் டத்தோ தொகுதியிலேயே பிரச்சாரம் செய்துவந்த பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி, கடந்த சில நாட்களாக நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் சென்று தேசிய முன்னணிக்கு ஆதரவான தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை ஜோகூர் மாநிலத்தில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் போட்டியிடும் சிகாமாட் தொகுதியில் தனது இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை சாஹிட் செகிஜாங் பகுதியில் மேற்கொண்டார்.

தனது தொகுதிக்கு வருகை தந்து தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திரத்தை மேலும் சிறப்பாகச் செயல்பட ஒத்துழைப்பு வழங்கிய சாஹிட் ஹமிடிக்கு டாக்டர் சுப்ரா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice