Home தேர்தல்-14 நாடெங்கிலும் 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது!

நாடெங்கிலும் 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது!

1012
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று மே 9-ம் தேதி, புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது.

நாடெங்கிலும் 8,253 வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், 14,449,200 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இன்று தங்களது வாக்குகளை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மொத்தம் 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 687 பேரும், 505 சட்டமன்றத் தொகுதிகளில் 1,646 பேரும் போட்டியிடுகின்றனர். அவர்களில் தங்களுக்குப் பிடித்தவர்களை வாக்காளர்கள் தேர்வு செய்யவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இன்று மாலை 5 மணி வரையில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

இதனிடையே, 85 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் இன்று இரவு 9 மணியளவில் அறிவிக்கப்படும்.