Home வணிகம்/தொழில் நுட்பம் 2020 இல் உலகின் மூன்றாவது விமானப் போக்குவரத்துத் தளமாக இந்தியா மாறும்

2020 இல் உலகின் மூன்றாவது விமானப் போக்குவரத்துத் தளமாக இந்தியா மாறும்

507
0
SHARE
Ad

Ajit-SIngh-Civil-Aviation-Ministerபுதுடில்லி, மார்ச் 27 –  உலகில் மூன்றாவது விமானப் போக்குவரத்து மையம் என்ற இடத்தைப் பிடிக்கும் விதமாக இந்திய விமான நிலையங்கள் வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 421 மில்லியன்  கூடுதலான பயணிகள் விமான சேவைகளை உபயோகிக்க வழிவகைகளும் மேம்பாடும் செய்யப்படவிருக்கிறது.

இதற்காக  120 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜிட் சிங் (படம்) கடந்த செவ்வாயன்று நடந்த,’விமானப் போக்குவரத்து’ நாளில் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இந்தியா 121 மில்லியன் உள்நாட்டு மற்றும் 41 மில்லியன் அயல்நாட்டு பயணிகள் பயன்படுத்தும் விமானத்தளமாக உலகில் 9 இடத்தில் இருப்பதாக அவர குறிப்பிட்டார். அதோடு தற்போது 85 பன்னாட்டு விமானங்கள் இந்தியாவுக்கு வருவதையும்,5 இந்திய சரக்கு விமானங்கள் உலகெங்கும் 40 நாடுகளுக்குச் செல்வதையும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும் இந்த விமான போக்குவரத்துத் துறையால் பொருளாதார வளர்ச்சியும், சுற்றுலாத்துறையும் பெருகுவதால் அந்நிய செலாவணி  வருவாய்க்கு முக்கிய பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார்.

இத்துறை 56.6 மில்லியன் வேலை வாய்ப்புகளையும், 7.1 மில்லியன் வேலைவாய்ப்புகளை சுற்றுலாத் துறை மற்றும் அது சார்ந்த துறைகளும் பெறுவதாக சிங் கூறினார்.

இந்தியாவின் விமானநிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டதாலும், வசதிகள் அதிகரிக்கப்பட்டதாலும் இந்நாட்டைக் கடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் கூறினார். மேலும் புதிய பாதுகாப்புமிக்க நவீனமயமான விமான நிலையங்களும் கட்டுமானத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பல்வேறு தகுதிமிக்க,வசதியான பயணம் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம்  இம்துறையில் இந்தியா துரித வளர்ச்சி அடைய முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

மிக முக்கியமாக சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவருவதும்,  49 விழுக்காடு வெளிநாட்டு நேரடி முதலீடு இந்தியாவிற்கு வருவதும் இதில் அடங்கும் என்றார் அவர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

— BERNAMA

SM SM TOM