Home தேர்தல்-14 ஹராப்பான் தலைவர்களின் செல்போன் எண்கள் ஹேக் செய்யப்பட்டன – லிம் கண்டனம்!

ஹராப்பான் தலைவர்களின் செல்போன் எண்கள் ஹேக் செய்யப்பட்டன – லிம் கண்டனம்!

1071
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களின் செல்போன் எண்கள் சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டதால், தாங்கள் வாக்களிப்பு மையங்களில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருப்பதாக பினாங்கு மாநில பராமரிப்பு அரசாங்கத்தின் முதல்வர் லிம் குவான் எங் குற்றம்சாட்டியிருக்கிறார்.

“நிறைய பொய்யான செய்திகள் பரவுகின்றன. ஆனால் என்னால் அதனை சரி செய்யமுடியவில்லை காரணம் என்னுடைய செல்போன் எண் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.

“நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் நினைத்தோம் எங்களில் சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும். ஆனால் கிட்டத்தட்ட அடிமட்டத் தலைவர்களிலிருந்து மூத்தத் தலைவர்கள் வரை எல்லோரும்” என லிம் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இது குறித்து மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்றும் லிம் குறிப்பிட்டிருக்கிறார்.