Home தேர்தல்-14 “நஜிப்புக்கு மக்கள் ஆதரவு இல்லை” – வாக்களித்த பின் மகாதீர் பேட்டி!

“நஜிப்புக்கு மக்கள் ஆதரவு இல்லை” – வாக்களித்த பின் மகாதீர் பேட்டி!

1116
0
SHARE
Ad

லங்காவி – பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளருமான துன் டாக்டர் மகாதீர் முகமது, லங்காவியில் இன்று காலை தனது துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மாவுடன் வந்து வாக்களித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், “நல்ல அரசாங்கம் என்பது நஜிப்பின் அரசாங்கம் போல் இருக்காது. நஜிப் எவ்வளவு இலவசங்கள் வழங்கினாலும் மக்கள் அதனை சட்டை செய்வதில்லை. பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நஜிப் ஏமாற்றாமல் இருந்தால்.

“எனக்குத் தெரியவில்லை எப்படி நஜிப் ஏமாற்றப் போகிறார் என்று. பார்த்தவரையில் மக்கள் ஆதரவு நஜிப்புக்கு இல்லை” என்று மகாதீர் தெரிவித்தார்.