கெடா மாநில சட்டமன்றத் தொகுதிகள் நிலவரம்
பிகேஆர் – 18
பாஸ் – 15
தேசிய முன்னணி – 3
மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பெரும்பான்மை இடங்களை பிகேஆர் கைப்பற்றி இருந்தாலும், பிகேஆர் ஆட்சி அமைக்க பாஸ் கட்சியும், தேசிய முன்னணியும் எதிர்ப்பு தெரிவித்தால், அதனால் இரு தரப்புகளுக்கு 18:18 என்ற நிலைமை ஏற்படும்.
எனவே, கெடா மாநிலத்தில் அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் பிகேஆர் ஈடுபடும்போது, அதற்கு பாஸ் கட்சியும், தேசிய முன்னணியும் ஒத்துழைப்பு கொடுக்குமாக அல்லது முட்டுக்கட்டை போடுமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
Comments