Home தேர்தல்-14 அன்வார் விடுதலை: மாமன்னருக்கு அன்வார் நன்றி

அன்வார் விடுதலை: மாமன்னருக்கு அன்வார் நன்றி

717
0
SHARE
Ad
புதன்கிழமை (16 மே) மாமன்னரைச் சந்தித்த பின்னர் தனது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அன்வார்

கோலாலம்பூர் – இன்று காலை 11.30 மணியளவில் செராஸ் மறு வாழ்வு மையத்திலிருந்து விடுதலையான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கிருந்து உடனடியாக மாமன்னரின் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அங்கு மாமன்னருடன் ஒரு மணி நேரம் அன்வாரின் சந்திப்பு நீடித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

பின்னர் தனது வீட்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அன்வார் இப்ராகிம், நேற்று வரை சிறைக் கைதியாக இருந்த தன்னை மதித்து உடனடியாக சந்தித்த மாமன்னருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

மாமன்னரின் பண்பும் உள்நாட்டு, வெளிநாட்டு நிலவரங்கள் குறித்து அவர் விரிவாகத் தெரிந்து வைத்திருப்பது குறித்தும் தான் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்ததாகவும் அன்வார் தெரிவித்தார்.

அன்வார் மாமன்னரைச் சந்தித்தபோது, அவரது துணைவியார் வான் அசிசாவும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் உடனிருந்தனர்.