Home நாடு புகார்களையடுத்து கல்வியமைச்சராகும் முடிவை மாற்றிக் கொண்டார் மகாதீர்!

புகார்களையடுத்து கல்வியமைச்சராகும் முடிவை மாற்றிக் கொண்டார் மகாதீர்!

952
0
SHARE
Ad

கோலாலம்பூர் – துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் பிரதமர் மகாதீர், தான் கல்வியமைச்சர் பதவியையும் ஏற்கவிருப்பதாக அறிவித்தார்.

எனினும், பிரதமராக இருப்பவர் மற்றொரு அமைச்சர் பதவியை ஏற்கக் கூடாது என்ற பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கைக்கு எதிராக இருப்பதால், மகாதீரின் முடிவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கல்வியமைச்சர் பதவியைத் தான் ஏற்கப் போவதில்லை என அறிவித்திருக்கும் மகாதீர், அப்பதவிக்கு பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த டாக்டர் மஸ்லீ மாலிக்கிற்கு வழங்கியிருக்கிறார்.

கடந்த மார்ச் 12-ம் தேதி, பெர்சாத்து கட்சியில் இணைவதற்கு முன்பாக, அனைத்துலக இஸ்லாமிய மலேசியப் பல்கலைக்கழகத்தில் மஸ்லீ மாலிக் பேராசிரியராகவும், தீவிரவாத ஆய்வாளராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.