Home நாடு மகாதீருடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு!

மகாதீருடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு!

892
0
SHARE
Ad

புத்ராஜெயா – பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் தலைமையில் மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை, சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் இன்று சனிக்கிழமை சந்தித்தார்.

இன்று காலை 11 மணியளவில் பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில் உள்ள மகாதீர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த லீ சியான் லூங், மகாதீருடன் நட்புறவு முறையில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை குறித்த முழு விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில், இச்சந்திப்பில் சிங்கப்பூர் – மலேசியா இடையிலான அதிவேக இரயில் திட்டம் குறித்து அவர்கள் இருவரும் கலந்தாலோசித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice