Home தேர்தல்-14 எந்தப் பதவி? மகாதீருடன் அஸ்மின் அலி சந்திப்பு

எந்தப் பதவி? மகாதீருடன் அஸ்மின் அலி சந்திப்பு

955
0
SHARE
Ad
துன் மகாதீருடன் அஸ்மின் அலி

புத்ரா ஜெயா – சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவி வகிக்கும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, திங்கட்கிழமை பதவியேற்கப் போகும் துன் மகாதீரின் அமைச்சரவையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் எந்தப் பதவியில் தொடர்வது என்பது குறித்து அவர் ஆலோசனைகள் நடத்தி வருகின்றார்.

தனது நிலை குறித்து சிலாங்கூர் சுல்தானுக்கு தெரிவித்து இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அஸ்மின், இன்று சனிக்கிழமை (19 மே) காலை துன் மகாதீரை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தன்மீது நம்பிக்கை கொண்டு, தனது அமைச்சரவையில் நியமித்திருப்பது குறித்து மகாதீருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அஸ்மின், தொடர்ந்து சிலாங்கூர் சுல்தானையும் சந்தித்து அவரது அறிவுரைகளையும் பெற்ற பின்னர் இறுதி முடிவு எடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அநேகமாக அவர் மகாதீரின் அமைச்சரவையில் தொடர்வார் என்றும் அவருக்குப் பதிலாக புதிய மந்திரி பெசார் சிலாங்கூர் மாநிலத்திற்கு நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

(படங்கள்: நன்றி – அஸ்மின் அலி டுவிட்டர் பக்கம்)