இன்று சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களின் சந்திப்பு ஒன்றுக்கு கட்சியின் உதவித் தலைவருமான விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தேசியத் தலைவருக்குப் போட்டியிடும் தனது முடிவை நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில் முறையாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு அவர் அறிவித்தார் மஇகா தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் முதல் வேட்பாளராக அவர் திகழ்வார்.