Home நாடு பேரரசருடன் திருமணமா? – நூருல் இசா மறுப்பு!

பேரரசருடன் திருமணமா? – நூருல் இசா மறுப்பு!

1782
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பேரரசர் சுல்தான் முகமட் v உடன் தனக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக வாட்சாப்பில் பரவி வரும் வதந்தியை பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் மறுத்திருக்கிறார்.

இது குறித்து இணையதளம் ஒன்றிற்கு நூருல் இசா கூறியிருக்கும் தகவலில், “தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள். மலேசியப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நமக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனைப் பார்ப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமை நூருல் இசாவின் பெற்றோரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும், டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயிலும் கிளந்தானில் சுல்தான் முகமட் V-ன் தாயார் தெங்கு அனிஸ் தெங்கு அப்துல் ஹமிட்டை, கூபாங் கெரியானில் உள்ள இஸ்தானா மாஹ்கோத்தாவில் சந்தித்தனர்.

#TamilSchoolmychoice

துணைப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, கிளந்தான் மாநிலத்திற்கு வான் அசிசா சென்ற முதல் பயணம் இதுவாகும்.

இந்நிலையில், சுல்தான் முகமட் V-ன் தாயாருடனான சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

என்றாலும், இச்சந்திப்பு சுல்தான் முகமட் V-க்கும், நூருல் இசா அன்வாருக்கும் திருமணம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளுக்காகத் தான் என வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.