Home நாடு புகார் தொடர்பாக நஜிப் மகளிடம் காவல்துறை விசாரணை!

புகார் தொடர்பாக நஜிப் மகளிடம் காவல்துறை விசாரணை!

1071
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ராஜா சூளனில் அமைந்திருக்கும் தனது ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிரடிச் சோதனை என்ற பெயரில் தனது திருமணத்திற்கு பரிசாக வந்த விலையுயர்ந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டதாக நஜிப்பின் மகள் நூர்யானா நாஜ்வா காவல்துறையில் புகார் அளித்தார்.

அதன் படி, நூர்யானா நாஜ்வாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

விசாரணையில் தனது பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நூர்யானா மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

1எம்டிபி தொடர்பாக அண்மையில் நஜிப்பின் உறவினர்கள் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.