Home நாடு ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பாரா?

ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பாரா?

1457
0
SHARE
Ad
அமார் சிங்

கோலாலம்பூர் – இன்றைக்கா, நாளைக்கா என ஆவலுடன் காத்திருக்கின்றன ஊடகங்கள் – கூடவே மலேசியர்களும்!

முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் 114 மில்லியன் ரிங்கிட் என அறிவித்த காவல் துறையின் அமார் சிங், கைப்பற்றப்பட்ட விலையுயர்ந்த கைக்கெடிகாரங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை நிபுணர்களைக் கொண்டு மதிப்பீடு செய்து இந்த வாரம் அறிவிப்பேன் என அறிவித்திருந்தார்.

அந்த அதிரடி அறிவிப்புக்காகத்தான் அனைவரும் காத்திருக்கின்றனர்.

அடுத்த 6 மாதங்களுக்கு அமார் சிங் அதிரடி தொடரும்

#TamilSchoolmychoice

மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் திடீர் நட்சத்திரங்களாக பல அரசியல்வாதிகள் தோன்றியிருக்கும் நிலையில், காவல் துறையிலும் ஒரு கதாநாயகனாக உருவாகி உலா வந்து கொண்டிருப்பவர்தான் அமார் சிங் இஷார் சிங்!

காவல் துறைத் தலைமையகத்தின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவின் இயக்குநரான அமார் சிங், 1எம்டிபி விவகாரங்களை விசாரிக்கும் பொருட்டு அதிரடியாக பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி பெட்டி, பெட்டியாக ரொக்கப் பணத்தையும், ஆடம்பரப் பொருட்களையும் கைப்பற்றியிருக்கிறார்.

இதற்கிடையில் அமார் சிங் எதிர்வரும் ஜூன் 6-ஆம் தேதியோடு பதவி ஓய்வு பெறவிருந்தார். ஆனால் அவரது அனுபவம், 1 எம்டிபி குறித்து அவருக்குத் தெரிந்திருக்கும் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, அடுத்த 6 மாதங்களுக்கு அமார் சிங்கின் அதிரடி வேட்டைகளும், அறிவிப்புகளும் தொடரும்!