Home நாடு மஇகா தேசியத் தலைவர் தேர்தல் குழு அமைக்கப்பட்டது

மஇகா தேசியத் தலைவர் தேர்தல் குழு அமைக்கப்பட்டது

1093
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை (மே 29) நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் குழு அமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜூன் மாத மத்தியில் முதல் கட்டமாக கிளைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அதைத் தொடர்ந்து தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும்.

தேசியத் தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அதன் பின்னரே தொகுதித் தேர்தல்களும், மாநிலத் தேர்தல்களும் நடத்தி முடிக்கப்பட்டு, தேசியப் பொதுப் பேரவையில் தேசிய நிலையிலான பதவிகளுக்கானப் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மத்திய செயலவை அமைத்திருக்கும் தேசியத் தலைவர் தேர்தல் குழுவில் மலாக்கா மாநில முன்னாள் தலைவர் டத்தோ ஆர்.ராகவன், நெகிரி மாநிலத்தின் டத்தோ எல்.கிருஷ்ணன், ஜோகூர் மாநிலத்தின் டத்தோ கே.எஸ்.பாலகிருஷ்ணன், பேராக் மாநிலத்திலிருந்து தங்கேஸ்வரி, பினாங்கு மாநிலத்திலிருந்து டத்தோ ராஜபதி, சிலாங்கூர் மாநிலத்திலிருந்து டத்தோ கோபாலகிருஷ்ணன், கெடா மாநிலத்திலிருந்து டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் உள்ளிட்ட ஒரு குழுவினர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசியத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் என நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அறிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக நடப்பு மஇகா தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார்.