Home நாடு நஜிப்புக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது

நஜிப்புக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது

906
0
SHARE
Ad
பிரியாவிடை – படம்: நன்றி – நஜிப் முகநூல் பக்கம்

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப்புக்கான பாதுகாப்பு வளையம் தற்போது குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையின் பல பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை, அவரைக் கட்டியணைத்துக் கண்ணீருடன் விடைபெற்றுக் கொண்டனர்.

அந்தப் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் நஜிப் வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நஜிப்புக்கான பாதுகாப்பு அம்சங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது காவல் துறையின் பொறுப்பு என்றும் பிரதமர் துன் மகாதீர் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பில் கருத்துரைத்த காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) புசி ஹருண் இது வழக்கமான ஒன்று என்றும், ஒரு முன்னாள் பிரதமருக்கான பாதுகாப்புகள் நஜிப்புக்கும் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.