Home நாடு நம்பிக்கை நிதிக்கு கத்தோலிக்க தேவாலயங்கள் நன்கொடை

நம்பிக்கை நிதிக்கு கத்தோலிக்க தேவாலயங்கள் நன்கொடை

1323
0
SHARE
Ad
பினாங்கு மாநிலத்தின் புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றான செயிண்ட் ஆன் தேவாலயம்

ஜோர்ஜ் டவுன் – 5 வட மாநிலங்களில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் எதிர்வரும் ஜூன் 22 முதல் 24 வரை நடைபெறும் அனைத்து மத வழிபாட்டுக் கூட்டங்களிலும் வசூலிக்கப்படும் பணத்தை நம்பிக்கை நிதிக்கு நன்கொடையாக வழங்க வேண்டுமென பினாங்கு பிஷப் செபஸ்டியன் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த முன்மாதிரியை மற்ற தேவாலயங்களும் சமய அமைப்புகளும் பின்பற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிவரை நம்பிக்கை நிதிக்குக் கிடைக்கப் பெற்ற நன்கொடை 18 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது.