Home நாடு எம்ஆர்டி-3 மீண்டும் தொடங்கப்படலாம்

எம்ஆர்டி-3 மீண்டும் தொடங்கப்படலாம்

1423
0
SHARE
Ad
ஷாரில் மொக்தார் – எம்ஆர்டி தலைமைச் செயல் அதிகாரி

கோலாலம்பூர் – எம்ஆர்டி இரயில் சேவையின் 3-ஆம் கட்டக் கட்டுமானம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அது நாட்டுக்குத் தேவையான ஒன்று என்றும் பிற்காலத்தில் நாட்டின் நிதி நிலைமை சரியானதும் அந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் எம்ஆர்டி நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் ஷாரில் மொக்தார் (படம்) தெரிவித்துள்ளார்.

50 பில்லியன் ரிங்கிட் செலவினத்தை ஏற்படுத்தும் அந்தத் திட்டம் இரத்து செய்யப்படுவதாக துன் மகாதீர் அறிவித்துள்ளார்.

எம்ஆர்டி 1 என்பது சுங்கைபூலோ – காஜாங் இடையிலான திட்டமாகும். எம்ஆர்டி 2 என்பது சுங்கை பூலோ – புத்ரா ஜெயா இடையிலான திட்டமாகும். இந்த இரு இரயில் பயணச் சேவைகளையும் இணைக்கும் சுற்றுப் பாதை இரயில் சேவையாக எம்ஆர்டி 3 கட்டுமானம் அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

எம்ஆர்டி 3 திட்டம் இரத்து செய்யப்பட்டது தவறான முடிவல்ல – ஆனால் எதிர்காலத்தில் இந்தத் திட்டம் மிகவும் தேவைப்படும் என்றும் ஷாரில் மேலும் விளக்கியுள்ளார்.