Home நாடு ஓட்டுநர் உரிமம் இனி 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகலாம்

ஓட்டுநர் உரிமம் இனி 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகலாம்

565
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : தற்போது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் இனி ஒருமுறை புதுப்பித்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நடைமுறை அமுல்படுத்தப்படலாம் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

தற்போது ஆண்டுதோறும் அல்லது அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை ஒருவர் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க முடியும்.

புதிய நடைமுறை அமுலுக்கு வந்தால் இனி 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய ஓட்டுநர் உரிமங்களுக்கான அனுமதியை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

வாகனங்களுக்கான சாலைவரிக் கட்டணம் மூலம் இதுவரை ஆண்டுக்கு 3 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை அரசாங்கம் பெறுவதாகவும் அந்தக் கட்டணத்தை மறு சீரமைப்பு செய்யவும் தனது அமைச்சு உத்தேசித்திருப்பதாகவும் அந்தோணி லோக் தெரிவித்தார்.