Home நாடு 6 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் ஜூன் மாதத்தில் நடைபெறும்

6 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் ஜூன் மாதத்தில் நடைபெறும்

659
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நம் நாட்டின் அரசியல்வாதிகளும், வெவ்வேறு கட்சித் தலைவர்களும் அரசியல் ரீதியாக ஒருபுறத்தில் கடுமையாக மோதிக் கொண்டாலும், இன்னொரு புறத்தில் கண்ணியமும் நட்பும் பாராட்டும் வகையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதிலும் முனைப்பு காட்டுகின்றனர்.

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் 6 மாநிலங்களின் முதலமைச்சரும் மந்திரி பெசார்களும் இணைந்து தத்தம் மாநிலங்களின் சட்டமன்றங்களைக் கலைப்பது குறித்து இன்று புதன்கிழமை விவாதித்தனர்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநில மந்திரி பெசார்களும், பினாங்கு மாநில முதல்வரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த சந்திப்பைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூன் மாதத்தில் 15-வது பொதுத் தேர்தலின்போது கலைக்கப்படாத இந்த 6 மாநிலங்களின் சட்டமன்றங்களும் ஒரே நேரத்தில் கலைக்கப்பட்டு, அவற்றுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.