Home வணிகம்/தொழில் நுட்பம் ஈஆர்எல் இரயில் சேவை ஜூன் 4 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்

ஈஆர்எல் இரயில் சேவை ஜூன் 4 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்

756
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எக்ஸ்பிரஸ் இரயில் லிங்க் (ஈ.ஆர்.எல்) அதன் அனைத்து இரயில் சேவைகளையும் நாளை ஜூன் 4 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்.

நேற்று வெளியிட்ட அறிக்கையில், போக்குவரத்து அமைச்சகம் மற்றும் நில பொதுப் போக்குவரத்து முகமை ஆகியவற்றுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய உத்தரவு மற்றும் முழு நடமாட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டதாக அது கூறியது.

#TamilSchoolmychoice

“ஆகவே, நிதி ரீதியாக நிலையானதாக இருப்பதும் ஈ.ஆர்.எல் தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தொடர்ந்து சேவைகளை வழங்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, நிறுவனம் வருத்தத்துடன் அதன் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டி உள்ளது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.