Home நாடு கொவிட்-19: செப்டம்பரில் 26,000 மரணங்கள் வரை பதிவாகலாம்

கொவிட்-19: செப்டம்பரில் 26,000 மரணங்கள் வரை பதிவாகலாம்

682
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போதைய நிலவர அடிப்படையில் நாட்டில் கொவிட் -19 தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்திற்குள் 26,000 சம்பவங்களை எட்டும் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிவியல் மன்ற உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் அடீபா கமருல்சமான் தெரிவித்தார்.

கணிக்கப்பட்ட மரண எண்ணிக்கை இன்றுவரை பதிவு செய்யப்பட்ட 2,993 இறப்புகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையின் குறைந்தது ஒன்பது மடங்கு ஆகும்.

வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார மதிப்பீட்டு நிறுவனம் (ஐ.எச்.எம்.இ) மேற்கொண்ட ஆய்வில், ஆகஸ்டு இறுதிக்குள் தினசரி இறப்பு விகிதம் 200 சம்பவங்களை எட்டும் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

“இருதய நோய்க்குப் பிறகு மலேசியாவில் கொவிட் -19 இரண்டாவது இறப்புக்கான காரணியாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.