Home நாடு மகாதீரை மோடி சந்தித்தது 2-வது முறை

மகாதீரை மோடி சந்தித்தது 2-வது முறை

1052
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – நேற்று வியாழக்கிழமை துன் மகாதீரை இந்தியப் பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்தபோது ஊடகங்கள் அனைத்தும் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு என்றே குறிப்பிட்டன.

ஆனால், இன்று வெள்ளிக்கிழமை பத்திரிக்கையாளர் கூட்டத்தில் மோடியுடனான தனது சந்திப்பு குறித்து விளக்கமளித்த மகாதீர் “நானும் மோடியை இப்போதுதான் முதன் முறையாகச் சந்திப்பதாகத்தான் கருதினேன். ஆனால் நேற்று மோடி என்னைச் சந்தித்தபோது அவரை நான் ஏற்கனவே சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை என்னிடம் காட்டினார். 1990-ஆம் ஆண்டுகளில் அவரை நான் ஒருமுறை சந்தித்திருப்பதாக புகைப்படத்தைக் காட்டி நினைவுபடுத்தி மோடி கூறினார். எனக்கும் அது ஆச்சரியமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த மகாதீர், “மலேசியாவில் முதலீடு செய்யும்படி அவரை நான் கேட்டுக் கொண்டேன். அவரும் இந்தியாவில் முதலீடு செய்யும்படி மலேசிய வணிகர்களை ஊக்குவிக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டுள்ளார்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் சில மணி நேரங்கள் தங்கியிருந்த பின்னர் சிங்கப்பூர் புறப்பட்ட மோடியை அன்வார் இப்ராகிம் தம்பதியர் வழியனுப்பி வைத்தனர்.