Home நாடு மகாதீரைச் சந்தித்தார் மோடி!

மகாதீரைச் சந்தித்தார் மோடி!

1086
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – தனது இந்தோனிசியா மற்றும் சிங்கப்பூர் வருகைகளுக்கு மத்தியில் குறுகிய கால வருகையாக இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துன் மகாதீரைச் சந்தித்தார்.

புருணை சுல்தான், சிங்கை பிரதமர் லீ சியன் லுங் ஆகியோரை அடுத்து மகாதீரைச் சந்திக்கும் மூன்றாவது உலகத் தலைவராக மோடி திகழ்கின்றார்.

மோடியை வரவேற்க வாசல் வரை வந்து காத்திருந்த மகாதீர், மோடி காரை விட்டு இறங்கிய பின்னர் அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

#TamilSchoolmychoice

பின்னர் தனது குழுவினரையும் மோடி மகாதீருக்கு அறிமுகப்படுத்தினார்.

மோடியும், மகாதீரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.