புத்ரா ஜெயா – நாட்டின் கடன் நிலைமையைச் சீர்செய்யும் பொருட்டு நேற்று புதன்கிழமை பிரதமர் துன் மகாதீர் அறிவித்த ‘நம்பிக்கை நிதி’ (தாபோங் ஹரப்பான் மலேசியா) பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நம்பிக்கை நிதி தோற்றுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, தங்களின் பங்களிப்பை மக்கள் செலுத்துவதற்கு வசதியாக வங்கிக் கணக்குகளுக்கான எண்களும் அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் இதுவரையில் சுமார் 7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலான நன்கொடைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று அறிவித்தார்.