Home Photo News அன்வார் தம்பதியினர் மோடியை வழியனுப்பி வைத்தனர் (படக் காட்சிகள்)

அன்வார் தம்பதியினர் மோடியை வழியனுப்பி வைத்தனர் (படக் காட்சிகள்)

1510
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது இந்தோனிசிய வருகையை முடித்துக் கொண்டு, இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்த பின்னர், துணைப் பிரதமர் வான் அசிசாவையும் அவரது கணவர் அன்வார் இப்ராகிமையும் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

பின்னர் அன்வார் தம்பதியினருடனான தனது சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோடி “துணைப் பிரதமர் வான் அசிசாவையும் அவரது கணவர் அன்வார் இப்ராகிமையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. மிகவும் பயனுள்ள பல விவகாரங்கள் குறித்துக் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டோம். இந்தியா-மலேசியா இடையிலான நல்லுறவை வளர்க்கும் நோக்கில் பல அம்சங்களைக் கலந்தாலோசித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற நரேந்திர மோடியை அன்வார் தம்பதியர் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

#TamilSchoolmychoice