Home நாடு அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் பிகேஆர் கட்சியிலிருந்து வருவார்

அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் பிகேஆர் கட்சியிலிருந்து வருவார்

931
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷாவைச் சந்தித்ததைத் தொடர்ந்து அஸ்மின் அலிக்குப் பதிலாக புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்கப் போகும் சட்டமன்ற உறுப்பினர் யார் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசார் பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என அன்வார் இப்ராகிம் இன்று கோடி காட்டியுள்ளார்.

அன்வாருக்கும் சுல்தானுக்கும் இடையிலான சுமார் ஒரு மணி நேர சந்திப்பின்போது அடுத்த மந்திரி பெசார் குறித்த விவகாரமும் விவாதிக்கப்பட்டது எனவும் அன்வார் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

56 சட்டமன்றங்களைக் கொண்ட சிலாங்கூர் மாநிலத்தில் பிகேஆர் கட்சி 21 தொகுதிகளைக் கைப்பற்ற, ஜசெக 16 தொகுதிகளில் வென்றது.

அமானா 8 சட்டமன்றத் தொகுதிகளில் வென்ற வேளையில், பெர்சாத்து 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தேசிய முன்னணி 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வென்றது