Home நாடு எம்ஆர்டி 3-ஆம் கட்டத் திட்டம் இரத்து

எம்ஆர்டி 3-ஆம் கட்டத் திட்டம் இரத்து

1012
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – நாட்டின் மிகப் பிரம்மாண்டமான திட்டங்களை இரத்து செய்து அதன் மூலம் நாட்டின் நிதிவளத்தை அதிகரிக்கச் செய்ய புதிய பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் வகுத்து வரும் வியூகங்களில் ஒன்றாக இன்று எம்ஆர்டி இரயில் திட்டத்தின் 3-ஆம் பாகம் இரத்து செய்யப்படுவதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்டம் இரத்து செய்யப்படுவதாக துன் மகாதீர் அறிவித்திருக்கிறார். அதனை இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் மகாதீர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.