Home Photo News அன்வார் பேராக் வருகை (படக் காட்சிகள்)

அன்வார் பேராக் வருகை (படக் காட்சிகள்)

1665
0
SHARE
Ad
அன்வார் இப்ராகிமுடன் பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு

ஈப்போ – நேற்று செவ்வாய்க்கிழமை (மே 29) பேராக் மாநிலத்திற்கு வருகை தந்த பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ஈப்போவில் பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியதோடு, பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடினார்.

பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர்களுடன் அன்வார்
#TamilSchoolmychoice

அதன் பின்னர் குகுசான் மஞ்சோய் என்ற இடத்தில் நடைபெற்ற நோன்பு துறப்பு இப்தார் விருந்துபசரிப்பில் பொதுமக்களுடன் கலந்து கொண்டார்.

கிரியான் மாவட்டத்தில் உள்ள தஞ்சோங் பியண்டாங் என்ற இடத்தில் இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் அன்வார் இப்ராகிம் உரையாற்றினார்.

நோன்பு துறக்கும் விருந்து நிகழ்ச்சியில்
தஞ்சோங் பியண்டாங் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் அன்வார்

(படங்கள்: நன்றி – அன்வார் இப்ராகிம் வலைத்தளம்)