Home நாடு ஜூன் 19-ல் மந்திரி பெசார் பதவியைத் துறக்கிறார் அஸ்மின் அலி!

ஜூன் 19-ல் மந்திரி பெசார் பதவியைத் துறக்கிறார் அஸ்மின் அலி!

930
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வரும் ஜூன் 19-ல் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து நடப்பு மந்திரி பெசார் அஸ்மின் அலி விலகுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புதிய பக்காத்தான் அரசாங்கத்தில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சராக அஸ்மின் அலி நியமனம் செய்யப்பட்டிருப்பதால், மந்திரி பெசார் பதவியை அவர் கைவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,  சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஷாரியோ அல்லது ஸ்ரீ சித்தியா சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஷஹாருடின் படாருடினோ நியமனம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அதேவேளையில், சுங்கை காண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுஹைமி சாஃபியும் அப்பதவியில் நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.