Home நாடு “எங்களுக்குள் கருத்து வேறுபாடா? யார் சொன்னது?”

“எங்களுக்குள் கருத்து வேறுபாடா? யார் சொன்னது?”

1003
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரதமர் துன் மகாதீருக்கும், அடுத்த பிரதமராகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிமுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக அடிக்கடி ஊடகங்கள் கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மேலே காணும் புகைப்படம் பரவலாக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு துன் மகாதீர் தம்பதியரும், அன்வார் இப்ராகிம் தம்பதியரும் இணைந்து நோன்பு துறக்கும் விருந்துபசரிப்பு புகைப்படத்தை அன்வார் இப்ராகிம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹரப்பானின் தலைவர்கள் பலரும் அந்தப் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதோடு, இரண்டு தலைவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என்ற ஆரூடங்களை மறுத்துள்ளனர்.