Home நாடு பேங்க் நெகாரா: ஆளுநர் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டது

பேங்க் நெகாரா: ஆளுநர் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டது

1224
0
SHARE
Ad
முகமட் இப்ராகிம் – பதவி விலகும் பேங்க நெகாரா ஆளுநர்

கோலாலம்பூர் – நடப்பு பேங்க் நெகாரா ஆளுநர் முகமட் இப்ராகிம் எதிர்பார்த்தபடி இன்று புதன்கிழமை தனது பதவியிலிருந்து விலகினார்.

அவர் தனது பதவி விலகலுக்கான காரணங்களைக் குறிப்பிடவில்லை என்றும், அமைச்சரவை அவரது பதவி விலகலை ஏற்றுக் கொண்டது என்றும் இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றியபோது பிரதமர் துன் மகாதீர் அறிவித்தார்.

டான்ஸ்ரீ டாக்டர் செத்தி அக்தார் அசிசுக்குப் பதிலாக கடந்த 1 மே 2016-ஆம் நாள் பேங்க் நெகாராவின் 8-வது ஆளுநராக முகமட் இப்ராகிம் நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

முகமட் இப்ராகிமுக்குப் பதிலாக முன்னாள் பேங்க் நெகாரா துணை ஆளுநர் நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் அடுத்த ஆளுநர் யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த நவம்பர் 2016 வரை பேங்க் நெகாராவின் துணை ஆளுநராகப் பொறுப்பு வகித்த நோர் ஷம்சியா தனது பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பதவி விலகினார்.