Home உலகம் உலகக் கிண்ணம்: செனிகல் 2 – போலந்து 1 (முழு ஆட்டம்)

உலகக் கிண்ணம்: செனிகல் 2 – போலந்து 1 (முழு ஆட்டம்)

894
0
SHARE
Ad
செனிகல் விளையாட்டாளர்கள்

மாஸ்கோ – (அதிகாலை 12.55 மணி நிலவரம்) பலம் பொருந்திய ஐரோப்பியக் குழுக்களில் ஒன்றான போலந்துவுடன் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) மோதிய ஆப்பிரிக்க நாடான செனிகல் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் போலந்து நாட்டுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்து முதல் பாதியில் முன்னணி வகித்தது.

மலேசிய நேரப்படி (ஜூன் 19) இரவு 11.00 மணிக்கு ‘எச்’ பிரிவுக்கான இந்த ஆட்டம் தொடங்கியது. நள்ளிரவுக்குப் பின்னர் அதிகாலை 12.55 மணியளவில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆட்டம் தொடங்கிய 37-வது நிமிடத்தில் செனிகல் கோல் அடிக்க முற்பட்டபோது அதனைத் தடுக்க முயன்ற போலந்து விளையாட்டாளர் சியோனிக் தனது தரப்பு கோல் காவலரிடமே பந்தை அடித்து கோலாக்கினார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தபோது செனிகல் 1-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஆட்டம் தொடங்கிய 60-வது நிமிடத்தில் செனிகல் விளையாட்டாளர் பந்தை எடுத்துக் கொண்டு கோல் அடிக்க வேகமாக ஓடியபோது அவரை எதிர்கொண்டு பந்தைப் பிடிக்க வந்தார் கோல் காவலர்.

ஆனால், இலாவகமாக கோல் காவலரை ஏமாற்றி பந்தை எடுத்துச் சென்ற செனிகல் விளையாட்டாளர் நியாங் காலியாக இருந்த கோல் முகப்புக்குள் பந்தை எளிதாகப் புகுத்தி 2-0 என்ற கோல் கணக்கில் செனிகலை முன்னணிக்குக் கொண்டு வந்து வெற்றியை உறுதி செய்தார்.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 87-வது நிமிடத்தில் போலந்து விளையாட்டாளர் கிரைசௌவியாக் ஒரு கோல் போட்டு,  2-1 என்ற கோல் எண்ணிக்கையை நிலை நிறுத்தினார்.

ஆட்டத்திற்கான 90 நிமிடங்கள் முடிவடைந்து 4 நிமிடங்கள் கூடுதல் நேரத்தை நடுவர் வழங்கினார். எனினும் இரண்டு தரப்புகளும் கோல் எதுவும் அடிக்காத காரணத்தால் செனிகல் 2-1 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.