Home கலை உலகம் சர்ச்சையான விஜயின் ‘சர்கார்’ படத் தலைப்பு!

சர்ச்சையான விஜயின் ‘சர்கார்’ படத் தலைப்பு!

892
0
SHARE
Ad

சென்னை – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு ‘சர்கார்’ எனப் பெயரிட்டிருக்கிறது.

இதன் முதல் பார்வை நேற்று வியாழக்கிழமை இணையத் தளங்களில் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

அதே வேளையில், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாத வகையில், சர்கார் என்ற தலைப்பு தமிழில் இல்லையென சிலரும், முதல் பார்வை பதாகைகளில் விஜய் சிகரெட் பிடித்தபடி இருப்பதையும் சுட்டிக் காட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.