Home உலகம் 3-0 – அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த குரோஷியா

3-0 – அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த குரோஷியா

916
0
SHARE
Ad

மாஸ்கோ – உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் தொடரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் ஏற்கனவே உலகக் கிண்ணத்தை வெல்லும் அளவுக்கு பலம் பொருந்திய நாடாகவும், சிறந்த விளையாட்டாளர்களைக் கொண்ட குழுவாகவும் திகழும் அர்ஜெண்டினாவை 3-0 கோல்களில் தோற்கடித்து குரோஷியா அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சோகத்துடன் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி போன்ற சிறந்த விளையாட்டாளர்களைக் கொண்டிருந்தும் அவர்களால் அர்ஜெண்டினாவைக் காப்பாற்ற முடியவில்லை.

முதல் பாதி ஆட்டத்தில் இரு குழுக்களும் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை. 53-வது நிமிடத்தில் ரெபிக் முதல் கோலைப் புகுத்த, 80-வது நிமிடத்தில் மோட்ரிக் இரண்டாவது கோலை அடித்தார். ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே இருந்த நிலையில் 91-வது நிமிடத்தில் ரக்கிதிக் மூன்றாவது கோலை அடிக்க, அர்ஜெண்டினாவின் உலகக் கிண்ணக் கனவுகள் கலைந்தன.

#TamilSchoolmychoice

இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும் 16 குழுக்களில் ஒன்றாக குரோஷியா திகழ்கிறது.