Home உலகம் உலகக் கிண்ணம்: மெக்சிகோ 2 – கொரியா 1 (முழு ஆட்டம்)

உலகக் கிண்ணம்: மெக்சிகோ 2 – கொரியா 1 (முழு ஆட்டம்)

1034
0
SHARE
Ad

மாஸ்கோ – இன்று சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இரண்டாவது போட்டியில் மெக்சிகோ, தென் கொரியா இடையிலான ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் மெக்சிகோ முன்னணி வகித்து வருகிறது.

முதல் பாதி ஆட்டத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மெக்சிகோ கோலாக்கியதைத் தொடர்ந்து, 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் மெக்சிகோ முன்னணி வகிக்கிறது.

பினால்டி வளையத்துக்குள் எச்.எஸ்.ஜாங் என்ற விளையாட்டாளர் கரத்தால் பந்தைத் தடுக்க மெக்சிகோவுக்கு பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

வேலா அந்த பினால்டியை கோலாக்கினார்.

இரண்டாவது பாதி ஆட்டத்தில், 66-வது நிமிடத்தில் மெக்சிகோவின் ஜேவியர் ஹெர்னாண்டஸ் கோல் ஒன்றை அடிக்க, மெக்சிகோ 2-0 கோல் எண்ணிக்கையில் முன்னணிக்கு வந்தது.

தொடர்ந்து இரு குழுக்களுமே கடும் முயற்சிகள் செய்தபோதும், கோல் எதுவும் அடிக்க முடியாமல் திணறின.

எனினும், 90 நிமிட ஆட்டநேரம் முடிவடைந்து கூடுதலாக வழங்கப்பட்ட சில நிமிடங்களில் தென் கொரியாவின் எச்.எம்.சன் கோல் ஒன்றை அடிக்க 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் ஆட்டம் மெக்சிகோவுக்கு சாதகமாக முடிந்தது.