Home உலகம் உலகக் கிண்ணம்: பெல்ஜியம் 5 – துனிசியா 2 (முழு ஆட்டம்)

உலகக் கிண்ணம்: பெல்ஜியம் 5 – துனிசியா 2 (முழு ஆட்டம்)

1092
0
SHARE
Ad

மாஸ்கோ – இன்று சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான முதல் போட்டியில் பெல்ஜியம் 5-2 கோல் எண்ணிக்கையில் துனிசியாவைத் தோற்கடித்தது.

பெல்ஜியம் – துனிசியா  இரு நாடுகளுக்கிடையிலான இந்த ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் பெல்ஜியத்திற்கு ஒரு பினால்டி வாய்ப்பு கிடைக்க அதனை இடன் ஹசார்ட் அமைதியாகவும், பொறுமையாகவும் கையாண்டு கோலாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பெல்ஜியம் 1-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தது.

#TamilSchoolmychoice

அதனை அடுத்து, 16-வது நிமிடத்தில் ரொமெலு லுகாகு ஒரு கோல் அடிக்க 2-0 கோல் எண்ணிக்கையில் பெல்ஜியம் முன்னணி வகித்தது.

எனினும் அடுத்த இரண்டு நிமிடங்களில் துனிசியாவுக்குக் கிடைத்த வாய்ப்பை அதன் விளையாட்டாளர் புரோன் கோலாக்க, 2-1 கோல் எண்ணிக்கையில் பெல்ஜியம் முன்னணி வகித்து வந்தது.

முதல் பாதி ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் பெல்ஜியத்தின் ரொமெலு லுகாகு மற்றொரு கோலைப் புகுத்தி முதல் பாதி ஆட்டத்தின் முடிவை 3-1 என்ற நிலையில் பெல்ஜியத்துக்கு சாதகமாகக் கொண்டு வந்துள்ளார்.

லுகாகு பெல்ஜியத்துக்காக முதல் பாதி ஆட்டத்திலேயே இரண்டு கோல்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில்….

இரண்டாவதுபாதி ஆட்டத்தில் மேலும் 3 கோல்களைப் புகுத்தி 5-2 கோல் எண்ணிக்கையில் பெல்ஜியம் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது.