Home கலை உலகம் தனுஷின் முதல் இந்தி திரைப்படம் – வெளியிடும் தேதி மாற்றம்

தனுஷின் முதல் இந்தி திரைப்படம் – வெளியிடும் தேதி மாற்றம்

760
0
SHARE
Ad

danushமும்பை, மார்ச் 29- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவர் ‘ரஞ்சனா’ என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சோனம் கபூர் கதாநாயகியாக நடித்து, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படம் தனுஷின் முதல் இந்தித் திரைப்படம் ஆகும்.

சிறிய நகரம் ஒன்றில் வசிக்கும் காதலர்களின் கதை என்று இத்திரைப்படம் குறித்து சொல்லப்படுகின்றது. இத்திரைப்படத்தை ஜூன் 21-ம் தேதி வெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

ஆனால், அதே தேதியில் வித்யாபாலன் நடிக்கும் ‘கஞ்சக்கார்’ படம்  வெளிவர உள்ளது. அந்த நேரத்தில் தனுஷ் நடித்த ரஞ்சனா படத்தை வெளியிட்டால் பெரிய அளவில் வரவேற்பு இருக்காது என்று கருதிய தயாரிப்புக்குழு, தனது திட்டத்தை மாற்றியிருக்கிறது.

எனவே, தனுஷின் படம் ஜூன் 28-ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.

எனினும், பெரும்பாலும் அந்தத் தேதியிலேயே படம் வெளியிடப்படும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவித்தன.