மலேசிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘பி’ பிரிவில் ஸ்பெயின் 5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிச் செல்கிறது.
மற்றொரு ‘பி’ பிரிவு நாடான போர்ச்சுகல் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிச் செல்கிறது.
இதே பிரிவில் இடம் பெற்றிருந்த மொரோக்கோ, ஈரான் நாடுகள் உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகின்றன.
Comments