Home இந்தியா இந்தியாவில் கடப்பிதழ் விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்!

இந்தியாவில் கடப்பிதழ் விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்!

1062
0
SHARE
Ad

புதுடெல்லி – இந்தியக் குடிமகன்கள் தங்களது கடப்பிதழ்களை விண்ணப்பிக்க புதிய செயலியை இந்திய அரசு நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்திருக்கிறது.

‘பாஸ் சேவா ஆப்’ என்ற பெயருடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலியின் மூலம் நாடெங்கிலும் எந்த மூலையில் இருந்தும் கடப்பிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.

இப்புதிய செயலியை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.