Home நாடு புதிய ரிங்கிட் தாள்களை வெளியிட யோசித்து வருகிறோம்: மகாதீர்

புதிய ரிங்கிட் தாள்களை வெளியிட யோசித்து வருகிறோம்: மகாதீர்

1223
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஊழலை ஒழிக்க, அரசாங்கம், பழைய ரிங்கிட் தாள்களுக்குப் பதிலாகப் புதிய ரிங்கிட் தாள்களை வெளியிட யோசித்து வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

ரிங்கிட் தாள்களில் மாற்றமோ அல்லது ரொக்கமில்லா வசதிகளையோ ஏற்படுத்தினால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்றும் மகாதீர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

“அது அவ்வளவு எளிதல்ல. காரணம் ரிங்கிட்டை மாற்ற நினைத்தால், முதலில் எவ்வளவு ரிங்கிட் தாள்கள் புழக்கத்தில் உள்ளன என்பது தெரிய வேண்டும். அப்போது தான் அந்தளவிற்குப் புதிய ரிங்கிட் தாள்களை அறிமுகம் செய்ய முடியும். அது மிகப் பெரிய மதிப்பு.

#TamilSchoolmychoice

“அவ்வாறு மாற்ற வேண்டுமென்றால், அதற்கு மிகப் பெரிய அளவில் ரிங்கிட் தாள்களை அச்சடிக்க வேண்டும். அதை அவ்வளவு எளிதில் முடிவெடுத்துவிட முடியாது. முதலில் பொருளாதாரத்தின் விளைவுகளை ஆய்வு செய்ய வேண்டும்” என்று மகாதீர் தெரிவித்திருக்கிறார்.