Home நாடு இந்தோனிசியா செல்கிறார் மகாதீர்!

இந்தோனிசியா செல்கிறார் மகாதீர்!

814
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – பிரதமர் துன் மகாதீர் இன்று வெள்ளிக்கிழமை இரண்டு நாட்கள் வருகை மேற்கொண்டு இந்தோனிசியா செல்கிறார்.

மகாதீர் பிரதமராகப் பதவியேற்ற நிகழ்ச்சி முடிந்தவுடன் அவருக்கு முதன் முதலாக தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தவர் இந்தோனிசிய அதிபர் ஜோகோவி விடோடோ.

பிரதமராகப் பதவியேற்ற பின்னர் தான் வருகை தரும் முதல் நாடாக ஜப்பானைத் தேர்ந்தெடுத்த மகாதீர், அதைத் தொடர்ந்து பிரதமராகத் தான் வருகை தரும் முதல் ஆசியான் நாடாக இந்தோனிசியாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 29) மாலை ஜாகர்த்தா வந்தடையும் மகாதீர் பல்வேறு நிகழ்ச்சிகள், சந்திப்புகளுக்குப் பின்னர் நாளை சனிக்கிழமை நாடு திரும்புகிறார்.

அவருடன் அவரது துணைவியார் சித்தி ஹஸ்மாவும் செல்கிறார்.