Home நாடு அருள் கந்தாவைப் பதவி நீக்கம் செய்தது 1எம்டிபி!

அருள் கந்தாவைப் பதவி நீக்கம் செய்தது 1எம்டிபி!

937
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபியின் தலைவர் மற்றும் தலைமைச் செயலதிகாரியான அருள் கந்தா கந்தசாமியை நேற்று வியாழக்கிழமை அந்நிறுவனம் பதவிலிருந்து நீக்கம் செய்தது.

அதற்கான கடிதத்தை நேரடியாகப் பார்வையிட்டிருக்கும் மலேசியாகினி இணையதளம், 1எம்டிபி தலைவராக, ஒப்பந்தம் மற்றும் நம்பகத்தன்மை கடமைகளை அருள் கந்தா மீறியதால் அவரைப் பதவி நீக்கம் செய்வதாகத் தனது கடிதத்தில் கூறியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

அருள் கந்தாவைப் பதவி நீக்கம் செய்வதற்கான நிர்வாகக் கூட்டம் கடந்த ஜூன் 25-ம் தேதி நடைபெற்றதாகவும், அதில் முடிவெடுக்கப்பட்டு நேற்று ஜூன் 28-ம் தேதி பதவி நீக்கக் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice