
கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மகள் குற்றம் சாட்டியிருப்பதைப் போல், நஜிப்பின் பேரனின் வங்கிக் கணக்கு எதனையும் தாங்கள் முடக்கவில்லை என ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை ஆணையம் டத்தோஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார்.
நஜிப்பின் மகளான நூர்யானா நஜ்வா தங்களின் குடும்பத்தினர் பலரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும், நஜிப்பின் பேரனான தனது சிறுவயது மகனின் வங்கிக் கணக்கும் அதில் அடங்கும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கூற்றை ஊழல் தடுப்பு ஆணையம் மறுத்துள்ளது.