Home நாடு சாகிர் நாயக்கை நாடு கடத்த இந்தியா விண்ணப்பம்

சாகிர் நாயக்கை நாடு கடத்த இந்தியா விண்ணப்பம்

838
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்திய தொலைக்காட்சி அலைவரிசையான ரிபப்ளிக் டிவிக்கு வழங்கிய பேட்டியில் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

தங்களின் விண்ணப்பம் மலேசிய அரசாங்கத்தின் வசம் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும், கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் சம்பந்தப்பட்ட மலேசிய அரசாங்க இலாகாக்களுடன் இதுகுறித்து தொடர்பில் இருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

எனினும், நேற்று வியாழக்கிழமை பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மலேசியக் காவல் துறைத் தலைவர் புசி ஹருண் காவல் துறையைப் பொறுத்தவரை இதுவரையில் சாகிர் நாயக்கை நாடு கடத்தும் விண்ணப்பம் எதனையும் தாங்கள் இதுவரை பெறவில்லை எனத் தெரிவித்தார்.