Home நாடு 80 பில்லியன் குத்தகைகள் முடக்கம் – சீனா செல்கிறார் டாயிம்

80 பில்லியன் குத்தகைகள் முடக்கம் – சீனா செல்கிறார் டாயிம்

998
0
SHARE
Ad
துன் டாயிம் சைனுடின்

கோலாலம்பூர் – இதுவரையில் சீன அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்த 80 பில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலான குத்தகைகளை இரத்து செய்திருக்கிறது மலேசிய அரசாங்கம். இந்தத் திட்டங்களை இரத்து செய்திருப்பதில் முக்கிய பங்கு வகித்திருப்பது அரசாங்கத்திற்கான மூத்த ஆலோசகர்களின் குழு.

அந்தக் குழுவின் தலைவர் துன் டாயின் சைனுடின் இந்தக் குத்தகைகள் இரத்து குறித்து மேலும் விளக்கம் பெறவும், சீன அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தவும் விரைவில் சீனா செல்லவிருக்கின்றார்.

இந்தக் குத்தகைகளில் சிலவற்றை அவர் மறு ஆய்வு செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் சீனா செல்லவிருக்கும் துன் மகாதீரின் சீன வருகைக்கான முன்னோட்டமாகவும் டாயிம் சைனுடினின் வருகை பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

டாயிம் சீனா செல்வது குறித்து கருத்துரைத்த மகாதீர் “அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். எங்களுக்கு ஆலோசனை வழங்கலாம். ஆனால் இறுதி முடிவை நான்தான் எடுப்பேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த மாதம் தான் சீனா செல்லவிருப்பதையும் மகாதீர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.